21.5.09

சட்ட ஒழுங்கு சீர்குலைவு




பேருந்தில் ஒரு சில வாசகங்களை ஒட்டியிருக்கின்றனர் அதில் ஒன்று தான்-

புகை பிடிக்கக்கூடாது


இன்று நான் காலையில் வேலைக்கு பேருந்தில் வந்து கொண்டு இருந்தேன். அப்போது நான் வந்த பேருந்துக்கு முன்னால் ஒரு பேருந்து சென்றுகொண்டிருந்தது. அதுவும் முன்னாடி போகவில்லை, மற்ற பேருந்து செல்ல வழியும் விடவில்லை. நான் வந்த பேருந்து டிரைவர் ஹீரோ மாதிரி அந்த பேருந்தை தோற்கடித்து முன்னாடி சென்றார் அப்பொழுது பேருந்து ஆடுச்சே ஒரு ஆட்டம் எல்லோரும் பயந்துவிட்டோம். எல்லோரும் என்ன ஆச்சு, என்ன ஆச்சு என்று கேட்டனர் ஆனால் ஒன்றும் இல்லை என்று டிரைவர் சொல்லி சமாளித்துவிட்டார். நான் கொஞ்சம் சுற்றி சுற்றி பார்த்தேன் அப்போது தான் தெரிந்து முன்னாடி சென்றிருந்த பேருந்து ஓட்டுனர் ஒரு கையில் சிகரெட் பிடித்துக்கொண்டு மற்ற கையில் பேருந்தை ஓட்டிக்கொண்டு செல்கிறார். இப்படி ஒரு பொறுப்பில்லாத பேருந்து டிரைவர், இதை எல்லோரும் பார்க்கதான் செய்கிறார்கள். ஆனால் யாரும் கேட்கவில்லை. இந்த மாதிரி உள்ளவர்களுக்கு அரசாங்கத்தில் வேலை தருகிறார்கள். படித்தவர்கள் (நல்லவர்கள்) நிறைய பேர் வேலையில்லாமல் இருக்கிறார்கள் அவர்களுக்கு இந்த அரசு வேலை தரமாட்டேங்கிறது. இதில் நிறைய பேர் லஞ்சம் கொடுத்து வேலை வாங்கிக்கொள்கிறார்கள். அவர்களுக்கு எப்படி பொது மக்களின் உயிர் மேல் பாதுகாப்பு வரும். இது ஒரு புறம் இருக்க,

ஷேர் ஆட்டோ


இப்போது சென்னையில் சாலை நெருக்கடி ரொம்ப அதிகமாகிவிட்டது. காரணம் மக்கள் தொகை ஒரு பக்கம் மற்றொரு பக்கம் (வாகனங்கள்) பஸ், கார், இருசக்கர வாகனங்கள் ஒரு பக்கம் அதில் முக்கிய பங்கு ஷேர் ஆட்டோ. இந்த ஆட்டோ அதிகமான அளவில் சென்னையில் ஓடுகிறது. இந்த ஆட்டோவில் 4 பேர் தான் ஏறவேண்டும். ஆனால் ஆட்டோ ஓட்டுநரோ 10 பேர் ஏற்றுகிறார். இதனை சாலை போலீஸ்காரர்கள் மாமூல் வாங்கிக் கொண்டு அவர்களை விட்டுவிடுகினறனர். இதனால் அதிக அளவு விபத்து நடக்கிறது. இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால் நேற்று நான் பஸ்சில் இருந்து இறங்கி கொஞ்சம் தொலைவு நடந்து சென்றுகொண்டு இருந்தேன், அப்போது திடீர் என்று ஒரு சத்தம் திரும்பி பார்த்தால் எல்லோரும் ஓடுகின்றனர். நானும் ஓடினேன் என்ன என்று பார்த்தால் ஷேர் ஆட்டோ தலை கிழாக கவிழ்ந்துகிடந்தது. அந்த ஷேர் ஆட்டோவில் பயணம் செய்த அனைவருக்கும் நல்ல அடி. அதில் பொதுமக்கள் சிலபேர் அடிபட்டவர்களுக்கு வயதானவர்களுக்கு முதல் உதவி செய்தனர். அதில் சிலபேர் (35 வயதுக்குள்ளவர்கள்) அந்த ஆட்டோவில் வந்த இளம் பெண் ஒருத்தியை சூழ்ந்து அவளுக்கு உதவி செய்தனர், ஆனால் அவளுக்கு எந்த அடியும் படவில்லை. இதில் நம்முடைய மக்கள் சந்தில் சிந்து பாய்கிறார்கள். எனக்கு அந்த இடத்தில் வந்ததே கோபம் அந்த ஆட்டோகாரனை யாரும் ஒன்றும் கேட்கவில்லை. சிறிது நேரம் கழிந்து 3 பேர் அந்த ஆட்டோவை நிமிர்த்தினர் ஆட்டோ கண்ணாடி பொலபொல வென்று உதிர்ந்தன. அப்புறம் தான் நம் பொதுமக்கள் அந்த ஆட்டோகாரனை பார்த்து ஏன்பா இப்படி வேகமாக ஆட்டோவை ஓட்டிவந்தாய் என்று கேட்டனர். அதற்கு அந்த ஆட்டோகாரன் வயதானவர் ஒருவர் குறுக்கே வந்துவிட்டார் ஆட்டோ வந்த வேகத்தில் பிரேக் பிடிக்கவில்லை என்று அலட்சியமாக சொல்கிறான். பொது மக்கள் கேட்டுவிட்டு அவர் அவர் வேலைகளை பார்க்க சென்றுவிட்டனர். நான் அந்த வயதானவருக்கு கொஞ்சம் உதவிகளை செய்துவிட்டு நானும் வீடு திரும்பினேன்.


”நம் நாட்டில் சட்டம் ஏன் தன் கடமைகளை சரியாக செய்யமாட்டேங்குது. இதை கேட்பவர் யவரும் இல்லை. இதை பார்த்த என்னால் ஒன்றும் செய்ய முடியாமல் மன வேதனை தான் மிஞ்சுகிறது”.




7 comments:

ஆயில்யன் said...

// அளவில் சென்னையில் ஓடுகிறது. இந்த ஆட்டோவில் 4 பேர் தான் ஏறவேண்டும். ஆனால் ஆட்டோ ஓட்டுநரோ 10 பேர் ஏற்றுகிறார். /

பத்துபேரா என்ன பர்த் டிக்கெட்டு போட்டு ஏத்துவாரு போல...?

ம் ம் அரசு கேக்கணும்ன்னு மக்கள் சொல்லுவாங்க மக்கள் ஏன் அதை உபயோகிக்கிறாங்கன்னு அரசு சொல்லும் இதே நடைமுறைதான் இருக்கு :((((

அமிர்தவர்ஷினி அம்மா said...

என்னத்த சொல்ல

:(

சென்ஷி said...

:-(((

வருத்தம்தான் மிஞ்சுகிறது. சில வருடங்களுக்கு முன்பு ஷேர் ஆட்டோ ஒன்றின் மீது புகைவண்டி மோதி அநியாயமாய் பலர் இறந்து போனது நினைவிற்கு வருகிறது!

சட்டம் தன் கடமையை செய்யும் என்று போர்டில் எழுதி வைத்து படிக்கத்தான் லாயக்கு போலருக்குது..

ஜோசப் பால்ராஜ் said...

அரசுப் பேருந்திலா ஓட்டுநர் புகைத்துக்கொண்டே வண்டி ஓட்டினார்? நேரக் கொடுமை தான் இதெல்லாம்.

ஷேர் ஆட்டோவில் 7 பேர் வரை செல்லலாம். ஆனால் 10க்கு மேல் ஏற்றுவார்கள். ஷேர் ஆட்டோவை போல ஆபத்தான வாகனம் எதுவுமிருக்காது. வேறு வழியின்றி அதில் பயணம் செய்பவர்களின் நிலை மிக பரிதாபம். ஆனால் நகரங்களில் ஓடும் ஷேர் ஆட்டோக்கள் எல்லாம் அரசியல்வாதிகளுடையாதாயிருக்கும்போது எந்த காவல்காரர் கேள்வி கேட்பார்? கொடுக்கிறத வாங்கிக்கிட்டு சத்தம் போடாம போயிருவாங்க. அவ்ளோ தான்.
இந்தியாவில் மிக மிக மலிவானது மனித உயிர் தான்.

நட்புடன் ஜமால் said...

ரொம்ப உணர்ச்சி வசப்படுதிய போல ...

"உழவன்" "Uzhavan" said...

//இப்படி ஒரு பொறுப்பில்லாத பேருந்து டிரைவர், இதை எல்லோரும் பார்க்கதான் செய்கிறார்கள். ஆனால் யாரும் கேட்கவில்லை//

வருத்தமளிக்கிறது. யாராவது ஒருவர் கேட்டிருந்தால், அவரோடு சேர்ந்து பலரும் நிச்சயம் கேட்டிருப்பார்கள். நம்மிடம் முதலில் யார் கேட்பது என்பதுதான் பிரச்சனை. அடுத்தமுறை இதுபோல் ஏதேனும் பார்க்க நேர்ந்தால் தைரியாமத் தட்டிக்கேளுங்கள். உங்களோடு பலர் சேர்ந்துகொள்வார்கள்.

மோனிபுவன் அம்மா.. நம்ம வலைப்பக்கமும் கொஞ்சம் வாங்க :-)

pudugaithendral said...

எங்களுடன் இந்தியா சுற்று பயணத்துக்கு வந்திருந்த எங்கள் இலங்கை வீட்டு ஓனர் ஷேர் ஆட்டோவில் இருந்த மக்களின் எண்ணிக்கை + ஆடு, கோழிகளைப் பார்த்து செம் ஆச்சரியப்பட்டார்.

நமக்கு இதெல்லாம் சர்வ சாதாரண்ம்ல.

புலம்பத்தான் முடியும்பா