22.9.09

பெண் ஒரு பாவபட்ட ஜென்மம்


பெண் ஒரு பாவபட்ட ஜென்மம்

கதையல்ல இது நிஜமாய் நடந்த உண்மை சம்பவம் :


இதுமாதிரி நிலைமை யாருக்கும் வர கூடாது. என்ன? என்று கேட்குறிங்களா?

என் பக்கத்து வீட்டில் வசிக்கும் என் தோழியோட தோழிக்கு தோழிதான் இந்த பெண். அவள் பெயர் கீதா. சின்னஞ்சிறு வயதில் தன் தந்தையை இழந்தவள். தாய்தான் வளர்த்து வந்தாள். அவர்களுக்கு இவள் ஒரே மகள் தான். மிகவும் கஷ்டபடுகின்ற ஒரு குடும்பம். இவள் ஒரே மகள் என்ற காரணத்தால் அவள் அம்மா அவளை மிகவும் செல்லமாய் வளர்த்தாள். சமீபகாலமாக அவள் அம்மாவுக்கு உடல் நிலை சரியில்லாமல் இருந்தாள். இருந்தாலும் அந்த கஷ்டத்திலும் தன் மகளை சந்தோஷமாக வளர்த்தாள் அந்த அம்மா.


ஒரு நாள் திடிரென்று அவள் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டாள். சின்ன பெண் ஒன்றும் புரியவில்லை. இந்த பாவபட்ட உலகத்தில் இந்த பெண் எப்படிதான் வாழ போறாளோ தெரியவில்லை என்ற பதிலை சொல்லியபடியே அவளது தாய்மாமன் ஒருவர் வந்தார்.

அவளுக்கு எங்கோ இருந்து ஒரு சொந்தம் வந்தது என்று நினைத்து சந்தோஷபட்டாள் அந்த கீதா. தன் மாமன் தன்னை வீட்டுக்கு அழைத்து சொல்வார் என்று என்னியிருந்தாள் கீதா. ஆனால் அவள் நினைத்ததுக்கு நேர் மாறாக நடந்தது. அவளுடைய மாமன் அவன் வீட்டுக்கு அழைத்து செல்லாமல் அவனுக்கு தெரிந்த இன்னொரு தூரத்து சொந்தமான அத்தை ஒருத்தி வீட்டுக்கு அழைத்து சென்று விட்டுவிட்டான். தன் மனைவியிடம் இவளை அழைத்து செல்ல முடியாது இவள் இங்கு இருக்கட்டும் உனக்கு எதாவது உதவி செய்வாள் என்று சொல்லிவிட்டு அவளை அங்கே விட்டுவிட்டு சென்றான். நாட்கள் நகர்ந்து, விட்டு சென்ற மாமன் வந்து இவளை பார்கக வரவில்லை. இவளோ 10வது படிக்கிறாள். இவள் 10வது கால் எடுத்து வைக்கும் போது தான் தன் தாயை இழந்தாள். எப்படியாது கஷ்டபட்டு படித்துவிடவேண்டும் என்ற என்னத்தில் படித்தாள். இவள் படிக்கிறதோ ஒரு கார்பரேஷன் பள்ளியில் தான். அந்த பெண் குளிப்பது கூட அவங்க தெருவில் இருக்கும் ஒரு கார்பரேஷன் குளியல் அறையில் தான். அங்கு ஒரு நல்ல மனிதர் அவளிடம் காசு வாங்காமல் நீ போய் குளிச்சுக்கோமா என்று சொல்வாராம் அவர். அந்த துணியை துவைக்க சோப்பு கூட வாங்க காசு இல்லாமல் அவள் அப்படியே தினமும் துவைத்து கொள்வாளாம். அவள் தோற்றம் பார்பதர்கு ரொம்ப அழுக்காக தோன்றுவாள். அங்கு பணிபுரிந்த ஆசிரியரும் அவளை ஒன்றும் கேட்கமாட்டார்களாம். படிப்பில் கவனம் குறைந்து சுமாராக படிக்க ஆரம்பித்தாள். எதிலும் ஒரு ஈடுபாடு இல்லாமல் இருந்தாள் அந்த பெண் நாட்கள் நகர்ந்தபடியே இருந்தன. இதில் ஆறுதல் அவள் தோழி தான். இருவரும் நல்ல உயிர் தோழிகள். பிறகு அவளை அழைத்து சென்று ஒரு அத்தை வீட்டில் விட்டாரே அவள் மாமன், அவளோ அந்த பெண்ணை அவங்க வீட்டுக்குள்ளே விடவில்லை. வீட்டுக்குள் வந்து வேலை மட்டும் செய்ய விடுவாள் அவ்வளவு தான். வேலை முடிந்ததும் அவள் அந்த வாசலில் கொஞ்சம் இடம் இருந்தது. அதில் தான் தங்குவாள். இப்படியே சில நாட்கள் கழிந்தது. அவளோ வயதுக்கு வந்த பெண் பாவம் அவள் நிலைமை யாருக்கும் வரக்கூடாது. நாளுக்கு நாள் அவள் மனநிலை ஒரு மாதிரி ஆகி வாழ்கையில் எந்த பிடிப்பும் இல்லாமல் இருந்தாள். அத்தை சொன்ன வேலைகளை செய்து வளர்ந்தாள். இப்படியே நாட்கள் நகர்ந்தன. ஒரு நாள் அவள் தன் தோழியிடம் எனக்கு பிறந்தநாள் வரபோகுது டி என்றாள். அந்த தோழி தன் அம்மாவிடம் போய் சொன்னாளாம். அதற்கு அவ அம்மா கீதாவை நம்ம வீட்டுக்கு அழைத்து வா அவளுக்கு பிரியாணி செய்து கேக் வெட்டி அவளை சந்தோஷ படுத்தலாம் என்று சொன்னதாக அவள் தோழி வந்து அவளிடம் கூறினாள். இதை கேட்டவுடன் அவள் முகத்தில் தான் எவ்வளவு சந்தோஷம் தெரியுமா? அந்த சந்தோஷத்துடன் அவள் போய் அவ அத்தையிடம் கேட்டாள் ஆனால் அவள் அத்தையோ அங்கு எல்லாம் போக கூடாது என்று சொல்லிவிட்டாள். அவள் கனவு அப்படியே களைந்துபோனது. மறுநாள் அவள் பிறந்தநாளும் வந்தது அதே நாளில் அவள் அத்தை உனக்கு கால் முளைத்துவிட்டது வெளியே செல்லும் அளவுக்கு என்று சொல்லியபடியே திட்டிக்கொண்டிருந்தாள் அன்று அவள் அப்படி கேட்டதால் அவள் அத்தை அதை மனதில் வைத்துக்கொண்டு அவள் காலில் சூடு போட்டுவிட்டாள், அப்பொழுது அவள் அம்மா என்று அழுதபடியே வாசலில் அமர்ந்து அழுதாள். எப்பொழுதும் அந்த பெண் இரவு வந்தால் தூங்க மாட்டாள். காரணம் தாம் வயது வந்த பெண் வெளியே இருக்கிறோம் என்ற பயம். தன் அத்தை காலில் சூடு வைத்ததால் தன்னை மீறி தூங்கினாள். அவள் அம்மா இறந்தபிறகு அன்று தான் தன் நிலைமீறி தூங்கினாள் அவள். அன்று இரவே சில மனிதர்களால் அவளுடைய மானம் பறி போனது அவளோ அத்தை மாமா என்று கத்தினாள் கதறினாள் அப்போழுது அவள் அழுத சத்தம் அங்குள்ள யாருடைய காதிலும் விழவில்லை, ஏன் அந்த கடவுள் காதிலும் விழவில்லை, அங்கு இருந்தவர்களுக்கு இதயமும் இல்லை.

அவள் பிறந்தநாள் அந்த பொன் நாள் அவளுக்கு இறந்தநாளாகிவிட்டது. மறுநாள் காலை எல்லோருக்கும் விடிந்தது ஆனால் கீதாவுக்கு மட்டும் விடியாமலே போனது. அக்கம்பக்கத்தில் உள்ள வீட்டார்களுக்கு இப்படி நடந்தது என்று தெரியவந்தது. அங்கு உள்ள மனிதர்கள் அவள் அத்தையை திட்டினார்கள். அவள் அத்தையோ இரவோடு இரவாக வீட்டை காலி செய்து சென்றுவிட்டாள்.

இது எவ்வளவு ஒரு கொடுமையான நிலைமை. இப்போது அவள் கும்பிட்ட கடவுள் எங்கே, தெய்வமாய் நின்ற அவள் அம்மா கூட உதவ வரவில்லையே! அவள் கண்ட கனவு எல்லாம் மூச்சின்றி நின்றுவிட்டது. கடவுள் இருக்கிறாரா என்பது உண்மைதானா என்று எனக்கு சந்தேகமே வருகிறது.

இந்த நிலைமை இனி வேறு எந்த கீதாவுக்கும் (பெண்களுக்கும்) நடக்ககூடாது கடவுளே.

மக்கள் அனைவரும் கொஞ்சம் மனித நேயத்தோடு நடந்து கொண்டால் கீதாவுக்கு இந்த நிலைமை வந்திருக்காது.

11 comments:

சென்ஷி said...

:-(

கடவுளே.. என்னக் கொடுமை இது.. இப்படியா மனிதர்கள் இருக்கிறார்கள். மிக மிக வேதனையான நிகழ்வு!

ஆயில்யன் said...

சொல்வதற்கு ஏதுமில்லாத அளவுக்கு ஒரு பெண்ணின் வாழ்க்கை மிகக்குறுகிய காலத்தில் நடந்து முடிந்தேவிட்டது! :(

பாவச்செயலுக்கு துணைபோனவர்கள் கண்டிப்பாக தம் வாழ்நாளில் எதோனும் ஒரு கட்டத்தில் உணரும் வகையில் சம்பவங்கள் நடைபெறும் இறை நம்பிக்கை எப்பொழுதுமே பொய்க்காது !

butterfly Surya said...

மனிதம் அற்று போன மனிதர்களை என்னவென்று சொல்வது..??

வேதனையுடன்.....

நிஜமா நல்லவன் said...

:((

ப்ரியமுடன் வசந்த் said...

வருத்தம் மட்டுமே மிஞ்சுகிறது..

எங்கே விலைக்கு கிடைக்கும் மனித நேயம் என்ற அளவில் நாமும்...

நட்புடன் ஜமால் said...

இப்படியுமா இருப்பார்கள் என்று சொல்ல வைக்கும் படி இருக்கு நிகழ்வு.

மிகுந்த வருத்தத்துடன்.

இதற்காக கடவுளை - ...

gayathri said...

rompa kastama iruku pa

RAMYA said...

ஐயோ, இதை படித்து விட்டு என்நெஞ்சே வெடித்து விட்டது
என்ன சொல்லுவது என்றே எனக்கு தெரிய வில்லை.

இது போல் செய்யும் மனிதர்களை கண்டுபிடித்து தகுந்த தண்டனை கொடுக்க வேண்டும்

இன்னின்லைக்கு ஆளாக்கிய உறவுகளுக்கும் சரியான தண்டனை அளிக்க வேண்டும்.

இதெல்லாம் என்று நடக்கிறதோ அன்றுதான் மனித நேயம் இருக்கிறது என்று நம்பலாம்.

அழுகையாக வருகிறது :((

pudugaithendral said...

:((( மனம் கணத்துவிட்டது.

வெளியுலகிற்கு தெரியாமல் எப்படி எத்தனையோ இருக்கிறது

சுந்தரா said...

இயலாமையும் சோகமும்தான் மிஞ்சுகிறது :(

யாழினி said...

மிக மிக வேதனையான நிகழ்வு!

:(