14.3.09

மாமா வாங்கிக் கொடுக்க போற கார் மற்றும் பொம்மை




நேற்று மணி 7 இருக்கும் என் பிள்ளைகளுடன் போனில் பேசினேன். மோனி ஓடிவந்து போனை எடுத்து பேசினாள். உடனே சித்தி யாரடி போனில் என்று கேட்டார்கள். இதற்கு அவள் அம்மா ஆச்சி என்று சிரித்தபடியே சொன்னாள். இன்று என் பிள்ளைகளுடன் ரொம்ப நேரம் அவர்களுடைய நலனை பற்றி விசாரித்தேன். பிறகு மோனி அம்மா எனக்கு மார்ச் 16-ம் தேதி அன்று தான் முழுஆண்டு பரிட்சை துவங்குகிறது என்று சொன்னாள் அதற்கு நான் எப்ப மா முடியுது என்று கேட்டேன் அதற்கு அம்மா எனக்கு தெரியவில்லை என்று செல்லமாய் சினுங்கியபடியே சொன்னாள். சரி மா இப்ப என்ன மா செய்கிறாய் என்று கேட்டேன் அதற்கு அவள் நான் இந்தி எழுதி, படித்துக்கொண்டு இருக்கிறேன் என்று சொன்னாள். சரி மா நல்லா படிக்கனும் பரிட்சை வருகிறது என்று சொல்லி முடித்துவிட்டேன்.

பிறகு அவளிடம் அம்மாவுடையை பிரண்டு (தம்பி) மாமா சிங்க.... என்ற ஊரில் இருந்து போன் பேசுவார் என்று சொன்னேன் அப்படியாம்மா அவரிடம் நீ நல்லடியாக பேசவேண்டும் என்று சொன்னேன். அப்புறம் அவளிடம் அந்த மாமா உனக்கு மொம்மை வாங்கி தருவாறு என்று சொன்னேன். அவளுக்கு தான் எத்தனை சந்தோஷம் தெரியுமா? நான் கூட இல்லை ஆனால் எனக்கு போனில் பேசும்போதே உணர முடிந்தது. சரி டா செல்லம் நீ தம்பியிடம் போனை கொடு என்று சொன்னேன் சரி மா என்று சொல்லி டேய் புனேஷ் போன் டா உனக்கு என்று சொன்னாள் அதற்கு அவர் யாரு டி என்று அவள் அக்காவை கேட்க அதற்கு சித்தி டேய் உங்க அம்மா தான் டா போனில் என்று சொன்னார்கள். அதற்கு அவன் என்ன மா என்று கேட்டான். அவன் பேச்சில் சுருதி கொஞ்சம் கம்மியாகவே இருந்தது. என்ன டா என்று கேட்டேன். அதற்கு அம்மா, அம்மா, என்று சினுங்கியபடியே சொன்னான். எவ்வளவு எழுத சொல்றாங்க தெரியுமா எனக்கு கையெல்லாம் வலிக்குது அம்மா தாத்தாவும் எழுது எழுது படி என்று எப்ப பார்த்தாலும் சொல்லிக்கொண்டே இருக்கிறாரு அம்மா என்று சினுங்கியபடி சொன்னான். நான் சொன்னேன் நீ மட்டுமா டா எழுதுகிறாய் உன் கூட படிக்கிற எல்லா பையல்களும் தான் டா எழுதுகிறாங்க என்று சொன்னேன் இல்ல அம்மா என்று சொல்லி சரி அம்மா சினிங்கியபடி எழுதுகிறேன் என்று முடித்தான். பிறகு பரிட்சை வருகிறது நல்லா படி பா என்று சொன்னேன் சரி அம்மா என்று சொல்லி நான் நல்லா தான் படிக்கிறேன் தெரியுமா உடனே அவன் அரையாண்டு பரிட்சையில் நான் தான் 1வது ரேங்க் , அக்கா இல்லமா 2வது ரேங்க் தெரியுமா மோனி 1வது ரேங்க் பொய் சொல்லிவிட்டா மா என்று அவளை மாட்டிக் கொடுத்தான். சரிடா நான் உடனே அக்கா தெரியாம சொல்லிவிட்டா விடுடா என்று சொல்லிவிட்டேன் பா. சின்னவன் எதையும் எளிதாக விடமாட்டான். அவனை ஒரு வழியா சமாதானம் செய்து பிறகு அவனிடம் சொன்னேன் அம்மாவுடைய பிரண்டு (தம்பி) மாமா சிங்க.... என்ற ஊரில் இருந்து போன் பேசுவார் மரியாதையாக பேசவேண்டும் என்று சொன்னேன் சரி மா என்று சொன்னான். அப்புறம் அந்த மாமா உனக்கு கார் வாங்கி தருவாரு என்று சொன்னாரு டா என்றேன் அதற்கு அவன்” அம்மா எனக்கு கார் ஓட்ட தெரியாதே அய்யோ அதை நான் எங்கு வைப்பேன் என்று சொன்னான்” வீட்டில் எல்லோருக்கும் ஒரே சரிப்புதான் புவன் பேசியதைக் கேட்டு ..... அதற்கு நான் இல்ல டா புவனேஷா மாமா உனக்கு விளையாடுகிற ரிடோட் கார் வாங்கி தருவதாக சொன்னாரு டா என்றேன் பா. அதானே பார்த்தேன் என்று சொன்னான் மறுபடியும் எனக்கு கார் ஓட்ட தெரியாதே என்று நினைத்தேன் என்று சொன்னான் பா.

சரி டா அம்மா நாளைக்கு போன் பேசுகிறேன் என்று முடித்துவிட்டேன்.
சரி அம்மா பாய்........... குட் னைட் என்று சொல்லி போனை வைத்துவிட்டான்.

அப்புறம் அவங்க அப்பா வேலையில் இருந்து வந்தார் அவரிடம் உங்க பிள்ளைகள் இப்படி பேசுகிறார்கள் என்று சொன்னேன் அவரும் சந்தோஷம் பட்டார்.

பிறகு என் பிள்ளைகளாச்சே அப்படி தான் இருப்பாங்க. உன்னை மாதிரியா இருப்பாங்க என்று சொல்லி சரித்தார்
.

”பிள்ளைகள் பேசுகின்ற ஒவ்வொரு வார்தைகளும் அழகுதான், சந்தோஷமும் தான் ”

6 comments:

நட்புடன் ஜமால் said...

உண்மைதான் பிள்ளைகள் பேசும் ஒவ்வொன்றும் சந்தோஷம் தான்.

ஆயில்யன் said...

//நீ மட்டுமா டா எழுதுகிறாய் உன் கூட படிக்கிற எல்லா பையல்களும் தான் டா எழுதுகிறாங்க என்று சொன்னேன் ///


அதானே :)))

//நான் தான் 1வது ரேங்க் , அக்கா இல்லமா 2வது ரேங்க் தெரியுமா மோனி 1வது ரேங்க் பொய் சொல்லிவிட்டா மா என்று அவளை மாட்டிக் கொடுத்தான். //

படிக்கிறதுக்கு தயக்கப்பட்டாலும் குட்டீஸ் என்னாமா வத்தி வைக்கிது பாருங்களேன் :)))))

சொல்லிவையிங்க மோனிப்பாப்பாவும் நல்லாத்தான் படிக்கிதுன்னு :)))))))))

நட்புடன் ஜமால் said...

\\ அம்மா எனக்கு கார் ஓட்ட தெரியாதே அய்யோ அதை நான் எங்கு வைப்பேன் என்று சொன்னான்\\

இந்த மழலையை கேட்ட உங்களுக்கு எவ்வளவு சந்தோஷம் இருக்கும் ...

கொடுத்து வச்சவங்க நீங்க

அமிர்தவர்ஷினி அம்மா said...

அடடா

என் செல்லங்கள் இவ்வளவோ பேசுதா...?

பார்த்து ரசிக்க முடியலனாலும், படித்து ரசித்தேன்.

ஹாட்ஸ் ஆஃப் புவனேஷ் & மோனி

ஜோசப் பால்ராஜ் said...

குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்.

இத ஏற்கனவே வள்ளுவர் 2000 வருசத்துக்கு முன்னாடியே சொல்லிட்டாரு, அதுக்கு மேல நான் சொல்ல என்ன இருக்கு?

சந்தனமுல்லை said...

உங்கள் சந்தோஷத்தை உணர முடிகிறது! உங்கள் குழந்தைகள் சுட்டிகள்!! வாழ்த்துகள் குட்டீஸூக்கு!
வேர்ட் வெரிபிகேஷனை எடுத்துடுங்களேன்!