”இந்த உலகத்தை நான் கண்விழித்து பார்பதற்கு காரணமாக இருந்த என் அன்பு அப்பாவையும், அம்மாவையும் தந்த கடவுளுக்கு முதலில் நான் நன்றி சொல்கிறேன்.”
ஏனென்றால்
இந்த உலகத்தில் எனக்கு கிடைத்த அப்பா, அம்மா போல வேறு யாருக்கும் கிடைத்திருக்கமாட்டார்கள் அவ்வளவு நல்லவர்கள். என் மேல் அவர்கள் உயிரையே வைத்திருந்தார்கள். அதை நான் தான் சரியாக புரியாமல் நடந்துக்கொண்டேன். ஏன்னென்றால் நான் அவர்களுக்கு ஒரே மகள். செல்ல மகள். நான் எது கேட்டாலும் வாங்கிக்கொடுப்பார் என் அப்பா. அதனால் எனக்கு அப்பாவை ரொம்ப பிடிக்கும். என்னை யாரும் ஒருவார்தை சொல்ல விடமாட்டார். நான் ஏதாவது சேட்டை செய்துவிட்டால் என்னை திட்டமாட்டார் என் அம்மாவைதான் திட்டுவார். அவ்வளவு செல்லம்நான். எனக்கு அம்மா என்றால் அந்த சிறு வயதில் பிடிக்காது காரணம் அவங்க எப்பப்பார்தாலும் என்னை அடிப்பார் திட்டுவார். அம்மா என்றால் ரொம்ப பயம். நானும் எப்ப பார்தாலும் ஏதாவது சேட்டை செய்து அடிவாங்குவேன். ஆனால் நான் இது நாள்வரை என் தந்தையிடம் ஒரு அடி வாங்கியது இல்லை. அவ்வளவு செல்லம் நான். எனக்கு எந்த வேலையாக இருந்தாலும் என் அப்பா தான் வருவார் செய்வார். என் தாய் எதிலும் கலந்துகொள்ளமாட்டார்கள். அதற்கு காரணம் அவர் உடல்நிலை சரியில்லாதவர். அப்போது அதை வெறும் காச்சல் என்றும் நினைத்துவிட்டார்கள். ஆனால் நான் வளர வளர பிறகு தான் தெரிந்தது அவர்களுக்கு வந்தது கேன்ஸர் என்று தெரிந்தது. ஆனால் அது தெரியும் போது அது முற்றிவிட்டது. பிறகு ஆப்பரேஷன் செய்து கொஞ்ச நாள் உயிருடன் இருந்தார். அவர்களுக்கு எங்க அப்பா ரொம்ப செலவு செய்து காப்பாற்றினார். அவர்களும் அதுக்கு பிறகு ஒரு 8 வருடம் தான் உயிருடன் இருந்தார்கள் அவங்களும் கடவுளிடம் போய் சோ்ந்துவிட்டார்கள். அப்போது எனக்கு ஒன்றும் தெரியவில்லை. என் அம்மா இறந்ததைப் பற்றி நான் கவலைபடவும் இல்லை. நாளடைவில் தான் நான் தனிமையாகிவிட்டேன் என்பதை உணர்ந்தேன். தனிமை என்னை பெரிதும் வாட்டியது. அதனால் நான் எப்போது பார்த்தாலும் என்னுடைய தோழிகளின் வீட்டில் தான் இருப்பேன். படிப்பில் கவணம் குறைந்தது. அன்புக்கு நான் ஏங்கினேன். ஆனால் நான் தேடிய உண்மையான அன்பு கிடைக்கவேயில்லை. அதனால் படிப்பில் கொஞ்சம் கவணம் இல்லாமல் போய்விட்டது. சின்ன சின்ன விஷயங்களுக்கு நான் என் அம்மாவை நினைக்க ஆரம்பித்தேன். ஆனால் என் அம்மா அங்கு அப்போது இல்லை. அப்போது அவர்கள் சொன்னவார்தை தான் எனக்கு நினைவுக்கு வந்தது. நான் இல்லாத போதுதான் என் அருமை உனக்கு தெரியும் டி என்று அப்போது சொல்வார்கள் அதை நினைத்து நான் பலமுறை தனிமையில் அழுதுள்ளேன். வாழ்கை எனக்கு ரொம்ப வெறுமையாகிவிட்டது. உண்மையான அன்பு எங்கு கிடைக்கும் என்று ஏங்கி தவித்தேன் நான். என் அப்பா என் மீது அளவுக்கடந்த அன்பு செலுத்தினார். நான் கேட்கும் போது பணம் தருவார். அது என்னை திருப்தி படுத்தவில்லை. நான் அந்த வயதில் எதையோ (அன்பை) தேடி அலைந்தேன். அவர் காலையில் வேலைக்கு சென்று இரவு தான் வீட்டுக்கு வருவார். அந்த .இடைப்பட்ட நேரங்களில் என்னை சாப்பிட்டியா நீ என்று கேட்ட யாரும் இல்லை. அந்த நேரத்தில் என் மீது ஒருவர் அன்பு காட்டினார். நான் தேடிய அன்பு அங்குதான் எனக்கு கிடைத்தது. அந்த அன்பில் நான் மகி்ழ்ந்தேன். அவர் தான் என் உலகம் என்று மாறியது. நாங்கள் இருவரும் திருமணம் செய்துக்கொண்டோம். அது என் அப்பாவுக்கு பிடிக்கவில்லை. பிறகு நீ எனக்கு மகளே இல்லை என்று சொன்னார். நான் என் அப்பாவிடம் இருந்து பிரிக்கப்பட்டேன். என் படிப்பு பாதியில் நின்றது. எனக்கும் படிக்கிற ஆர்வம் சுத்தமாக இல்லாமல் போய்விட்டது. பிறகு என் அப்பா வந்து சோ்ந்துவிட்டார். பிறகு குடும்பத்தில் என் அப்பாவுக்கும் என் கணவருக்கும் கருத்துவேறுபாடு நிறைய ஏற்பட்டது. குடும்பம் இரண்டாக பிரிந்தது.
என்னை விட்டு என் அப்பா எங்கோ சென்றார். இடைப்பட்ட காலத்தில் அவரைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியவில்லை. காலங்கள் கடந்தன அதற்குள் எனக்கு 2 குழந்தைகள் பிறந்தன. அதன் பிறகு என் அப்பாவுடைய நண்பர் ஒருவருடைய உதவியால் எங்கு இருக்கிறார் என்று தெரிந்தது. நான் என் அப்பாவைப் பார்தேன். அங்கு பேச்சே வரவில்லை. அழுகை தான் முதலில் வந்துது. என் அப்பா என்னை பார்த்து நீ எப்படி இருக்கிறாய் என்று கேட்டார். அந்த வார்தை என்னை என்ன செய்தது என்று சொல்வதர்கு வார்தையில்லை. பிறகு கடவுளுடைய கிருபையினால் அப்பா, சித்தியுடன் நாங்களும் சோ்ந்து உள்ளோம். இப்போது நான் என் தவறை உணர்ந்து நாங்கள் எல்லோரும் சந்தோஷமாக உள்ளோம். அவர்களுடன் ஊரில் தான் என் குழந்தைகள் இப்போழுது வளர்கிறார்கள். அவர்களும் நன்றாக என் குழந்தைகளை பார்த்துக்கொள்கிறார்கள். இப்போழுது எல்லோரும் சந்தோஷமாக உள்ளோம். இப்போதுதான் நான் வாழ்கையை புரிந்துக்கொண்டேன். இப்போது எனக்கு சில கடமைகளும் பொறுப்புகள் வந்துவிட்டன. இப்போது நான் என் குடும்பபொறுப்புகளை ஏற்றுக்கொண்டு என்குடும்பத்தையும் என் அப்பாவையும் நான் இப்போது சந்தோஷமாக வைத்திருக்கிறேன். இன்னும் என் அப்பாவுக்கு நிறைய செய்யவேண்டும் என்று நினைக்கிறேன்.
குறிப்பு :- இந்த சந்தோஷத்தை தந்த இறைவனுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியை பணிவுடன் சமர்பிக்கிறேன்.
Subscribe to:
Post Comments (Atom)

14 comments:
//நான் இல்லாத போதுதான் என் அருமை உனக்கு தெரியும் டி என்று அப்போது சொல்வார்கள் அதை நினைத்து நான் பலமுறை தனிமையில் அழுதுள்ளேன்///
உண்மைதான் இருக்கும்போது தெரியாத அன்பு பாசமெல்லாம் பிரிந்திருக்கையில் புரிகிறது!
இறைவன் அருளால் இன்று இனி வரும் காலங்கள் மகிழ்ச்சியோட அமைய வாழ்த்துக்கள் சகோதரி!
கண்கள் கலங்க வைத்து விட்டது உங்கள் வாழ்க்கை பற்றிய பதிவு. கடவுள் துன்பங்கள் தருவது நாம் இன்பங்களை முழுமையாய் ரசிக்கத்தான்...
வாழ்வில் மேன்மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்!
HATS OFF TO U
இதை படித்து முடிக்கும்போது என் கண்ணில் நீர்
//நான் இல்லாத போதுதான் என் அருமை உனக்கு தெரியும் டி என்று அப்போது சொல்வார்கள் அதை நினைத்து நான் பலமுறை தனிமையில் அழுதுள்ளேன்///
ம்ஹீம்,
எதையும் புரிந்து கொள்ளாத பாவியான ஒரு ப்ரண்டாய் நான் பக்கத்திலேயே இருந்திருக்கேன்
எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது, இப்போது நினைத்தால்
நாம் வணங்கும் கடவுள் உன் கனவுகளை நினைவாக்குவார் என்ற நம்பிக்கையுடனும், ப்ரார்த்தனைகளுடனும்
உங்களுக்கு என்றென்றும் மகிழ்ச்சி நீடிக்க வாழ்த்து்கிறேன்.
எதேச்சையாக உங்கள் பதிவு படிக்க நேர்ந்தது.
இறைவன் அருளால் இனி வரும் காலங்கள் மகிழ்ச்சியோட அமைய வாழ்த்துக்கள்
சகோதரி!
//என் அப்பாவையும் நான் இப்போது சந்தோஷமாக வைத்திருக்கிறேன்//
இது ஒன்றே போதும்மா.எல்லா நலமும் உண்டாகும்.
அன்புடன் அருணா
இறைவன் அருளால் இன்று இனி வரும் காலங்கள் மகிழ்ச்சியோட அமைய வாழ்த்துக்கள் சகோதரி!//
வழிமொழிகிறேன்
\\”இந்த உலகத்தை நான் கண்விழித்து பார்பதற்கு காரணமாக இருந்த என் அன்பு அப்பாவையும், அம்மாவையும் தந்த கடவுளுக்கு முதலில் நான் நன்றி சொல்கிறேன்.”\\
அருமையான துவக்கம்.
\\இந்த உலகத்தில் எனக்கு கிடைத்த அப்பா, அம்மா போல வேறு யாருக்கும் கிடைத்திருக்கமாட்டார்கள் அவ்வளவு நல்லவர்கள்.\\
நல்ல நம்பிக்கை.
\\ந்த நேரத்தில் என் மீது ஒருவர் அன்பு காட்டினார். நான் தேடிய அன்பு அங்குதான் எனக்கு கிடைத்தது\\
இது நடந்தே தீரும்.
\\நான் என் அப்பாவைப் பார்தேன். அங்கு பேச்சே வரவில்லை. அழுகை தான் முதலில் வந்துது. என் அப்பா என்னை பார்த்து நீ எப்படி இருக்கிறாய் என்று கேட்டார். அந்த வார்தை என்னை என்ன செய்தது என்று சொல்வதர்கு வார்தையில்லை.
ஆம் இந்த நிலைதான் வரும்...
\\பிறகு கடவுளுடைய கிருபையினால் அப்பா, சித்தியுடன் நாங்களும் சோ்ந்து உள்ளோம். இப்போது நான் என் தவறை உணர்ந்து\\
இது புரியலையே
என்ன தவறு செய்தீர்கள்
அல்லது
எதை தவறு என்று சொல்கிறீர்கள்
அக்கா...
என்ன சொல்றதுன்னே தெரியல.. மனசு ரொம்ப கனமா இருக்கு..
நிச்சயம் நான் இருப்பேன்.
கவலை படாதீங்க. -SARATH rasigan
அக்கா...
என்ன சொல்றதுன்னே தெரியல.. மனசு ரொம்ப கனமா இருக்கு..
நிச்சயம் நான் இருப்பேன்.
கவலை படாதீங்க. -SARATH rasigan
Post a Comment